பெங்களூரு சிறையில் சசிகலாவிற்கு சங்கடம்..! இம்மாதமே சிறை நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை..? அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.! - Seithipunal
Seithipunal


டிசம்பர் 13, 14-ம் தேதிகளில் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை மேற்கொள்ள உள்ளது. சிறையில் விசாரணை நடத்த அனுமதி கோரி வருமானவரித்துறை கடிதம் எழுதியிருந்தது. இதனை தொடர்ந்து விசாரணை நடத்த பெங்களூரு பரப்பன அஹரகார சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு  சசிகலா தரப்பில் வருமானவரி விசாரணைக்கு அனுப்பப்பட்ட விளக்க கடிதத்தில், தான் மவுன விரதம் இருந்து வருவதாகவும், அது முடியும் வரை வருமானவரி விசாரணைக்கு ஆஜராக முடியாது என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது மீண்டும் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஒத்துழைப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய அளவிலான வருமானவரி சோதனை சசிகலா குடும்ப நிறுவனங்களில் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

அதன் நோக்கம் மற்றும் கண்டுபிடிப்பு குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகும் நிலையில் அதுபற்றி விளக்கமளிக்கப்படாதது குழப்பங்களை அதிகரித்துள்ளது.

சசிகலா குழுவினரிடம் நடத்தப்பட்ட வருமானவரி ஆய்வில் கிடைத்த பணம், நகைகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்களை  வருமானவரித்துறை உடனடியாக வெளியிட வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

English Summary

sasikala on jail take inquireSeithipunal