அதிமுகவிற்கு அடிபணிந்த சர்கார்.! ஒரு வீரல் புரட்சி கையெடுத்து கும்பிட்ட பரிதாபம்.!!   - Seithipunal
Seithipunalசன் பிக்சர்ஸ் தயாரித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "சர்கார்" படம் நேற்று தீபாவளியன்று வெளியானது.

இந்த படம் பல சிக்கலை கடந்து தாண்டி வந்துள்ளது. இப்படம் தீபாவளி அன்று வெளியாகி விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 

இந்த நிலையில்., இந்த திரைப்படத்திற்கு எதிராக அதிமுக கட்சியினர் போர்க்கொடி தூக்கவே பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இந்த படத்திற்கு அதிமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் குதிக்க துவங்கினர். 

அதிமுக தொண்டர்கள் சர்கார் திரைப்படம் வெளியான திரையரங்களுக்கு சென்று போராட்டம் நடத்தியும்., கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட துவங்கினர். மேலும் திரைப்படத்திற்கு வைக்கப்பட்ட பேனர்களை அகற்றியும்., கிழித்தும் போராட்டங்களை நடத்த துவங்கினர். மேலும் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் செய்யாவிடில் பெரும் பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். 

இதன் காரணமாக சர்கார் திரைப்படத்தில் உள்ள காட்சிகளை நீக்குவதற்கு தயாரிப்பு நிறுவனமும் படக்குழுவும் சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் படி சர்சைக்குரிய காட்சிகள் நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மறு தணிக்கைக்குழுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. 

இலவச பொருட்களை தீயிடும் காட்சி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கோமளவல்லி என்ற பெயர் வரும் இடத்தில் ஒலியிழப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

English Summary

SARKAR MOVIE PROBLEM IS CLOSED TO CUT A SCENE

செய்திகள்Seithipunal