கடத்தப்பட்ட சந்தன மரம்! போலீஸ் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே… போலீசுக்கே அல்வா கொடுத்து விட்டு!! மீண்டும் கொள்ளையர்களின் கைவரிசை!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம், கம்பத்தில், புகழ் பெற்ற பழமையான கம்பராயர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் இருந்த சந்தன மரங்களை, கடந்த வாரம் ரம்பத்தால் அறுத்து, கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர்.
    
கம்பராயர் கோயிலின் தெற்குப் பகுதியில், இருபது ஆண்டுகள் பழமையான, இந்த சந்தன மரத்திலிருந்து, கடந்த வாரம் வெட்டி கடத்தப்பட்ட சந்தன மரங்களைக் கண்டு, அதிர்ந்த கோயில் நிர்வாகி செந்தில்குமார், போலீசில் புகார் அளித்தார்.


    
இந்த சந்தன மரங்கள் கடத்தப்பட்டதால், கம்பம் பகுதியே பரபரப்பாக இருந்தது. போலீசாரும், கோயில் வளாகத்தில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.
    
இது தொடர்பாக, உத்தமபாளையம் தாசில்தார், தேனி போலீஸ் எஸ்.பி. வரை புகார் சென்றது. தேனி கலெக்டரும், இது குறித்து விசாரணை செய்து, உரிய மேல் நடவடிக்கை எடுத்து அறிக்கை அனுப்புமாறு, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், தேனி மாவட்ட வன அலுவலர், தாசில்தார், வனப் பாதுகாப்பு அலுவலர் அகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
    
இவையெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, நேற்று முன் தினம், இரவில், வெட்டிக் கடத்தப்பட்ட மரத்தின் மற்றொரு பகுதியையும், கொள்ளையர்கள் துணிச்சலாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனால், கோயிலின் காவலாளி வடமலைராஜ் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். போலீசுக்கே அல்வா கொடுத்து விட்டு, மீண்டும், வெட்டிய மரத்தின் மற்றொரு பாகத்தை வெட்டிச் சென்றதால், அதிகாரிகள் உட்பட அனைவரும் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sandalwood tree conduction


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->