கோயிலில் வளர்க்கப்பட்ட சந்தன மரம்..! கடத்திய மர்ம கும்பல்..! சிக்கியது ஆதாரம்..!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் கம்பத்தில் கம்பராயர் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில், பெருமாள் மற்றும் சிவன் கோயில் அருகருகே உள்ளது. புதிய பேருந்து நிலையத்தின் தெற்குப் பகுதியில் உள்ள இந்தக் கோயிலைச் சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன.

மேலும், இந்தக் கோயில் வழியாக கிழக்கே செல்பவர்களும், கிழக்கிருந்து மேற்கேயும், ஏராளமானோர், தினசரி நடந்து செல்கின்றனர்.

இதனால், இந்தப் பகுதியில், எப்போதும் ஆள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்தக் கம்பராயர் கோயில், மிகப் பழமையானது.

மதுரையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களால், இங்குள்ள பெருமாள் மற்றும் சிவாலயங்கள், இந்தப் பகுதியில் குறு நில மன்னர்களாக ஆட்சி புரிந்த, பாளையக்காரர்களின் உதவியுடன் கட்டப் பட்டன.

இந்தக் கோயில் வளாகத்தில், சந்தன மரங்கள் வளர்க்கப் படுகின்றன. நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு, இரவு பூஜைகளை எல்லாம் முடித்து விட்டு, காவலர்கள் கோயி்ல்களின் கதவினைப் பூட்டி விட்டுச் சென்றனர்.

ஆனால், சந்தன மரம் இருந்த பகுதியைச் சுற்றி வேலி ஏதும் போடப்படவில்லை. அதனால், இரவு நேரம் யாரோ மர்ம நபர்கள், அந்த சந்தன மரங்களை, ரம்பம் கொண்டு, அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

நேற்று காலை, கோயிலைத் திறக்க வந்தவர்கள், சந்தன மரங்கள் வெட்டப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 இது குறித்து கோயில் பணியாளர்கள் மற்றும், கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர், கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sandal Tree Kidnaped.. Kambam Police Inquiry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->