டிக்டாக் வீடியோவால் வந்த வினை! பெரும் சோதனையில் சிக்கித்தவிக்கும் வியாபாரி! - Seithipunal
Seithipunal


தற்போது டிக் டாக் செயலி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு வியாபாரி ஒருவரும் டிக் டாக் வீடியோ மூலம் பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள இனாம் கரிசல்குளம் பகுதியில் வசித்து வருபவர் சந்திரன். 40 வயது நிறைந்த இவர் தனது ஊரில் நடைபெறவிருக்கும் குலதெய்வம் கோவில் வழிபாட்டின் போது,  போதிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை வைத்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் மனு கொடுத்துள்ளார்.

மனு கொடுத்துவிட்டு திரும்பிய அவர் போலீஸ் நிலையத்தை பின்னணியாக வைத்து செல்போனில் டிக் டாக்  வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் ,சந்திரன் வீடியோ வெளியிட்டு இருப்பதாக வன்னியம்பட்டி காவல் நிலைய போலீசார் சந்திரன் மீது புகார் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் அனைத்து இடங்களிலும் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் பல பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salesman struggled by tik tak video front of police Station


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->