பயந்துபோன தமிழக அரசு..! பதறிப்போன காவல்துறை..!! மாணவர்கள் போராட்டம் அறிவித்த 24 மணிநேரத்தில் 05 பேர் அதிரடியாக கைது..!!! - Seithipunal
Seithipunal


சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் 08 வழி பசுமை சாலைக்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தால் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள் கடும் பாதிப்புள்ளாகிறது. இதில் ஆயிரம் ஹெக்டேர் அரசு நிலம் வழியாகவும், 4 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வழியாகவும் இந்த பாதை அமைகிறது. மேலும், சேர்வராயன், கல்வராயன் மலை உள்பட 8 மலைகள் வழியாக,120 ஹெக்டேர் வனப்பகுதியும் வழியாகவும் இந்த சாலை அமைகிறது. 

23 பெரிய பாலங்களும், 156 சிறு பாலங்களும், 9 மேம்பாலங்களும், பாலங்களுக்கு கீழ் 22 வாகன கீழ் வழிச்சாலையும், 2 பாலங்களுக்கு கீழ் இன்னொரு வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது. வனப் பகுதியில் 3 சுரங்கப் பாதைகளும், 8 சுங்க சாவடிகளும், லாரிகள் மற்றும் பஸ்கள் நிறுத்தும் இடம் 10 இடங்களில் அமைக்கப்பட உள்ளது. 

இதனால் விவசாயிகளும், கிராம மக்களும், சுற்றுசூழல் ஆர்வாளர்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சேலம் பசுமை வழிச்சாலை பற்றி முகநூலில் பதிவு செய்தால் கூட தமிழக அரசு கைது நடவடிக்கையை ஆரம்பித்தது. தமிழக அரசின் இந்த அராஜக போக்கை கண்டித்து, தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கைளை வெளியிட்டு வருகின்றனர். 

இருப்பினும், சாலை அமைப்பதற்கு தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்துவதற்காக, நில அளவீடு செய்யும் பணியை வருவாய் துறையினர் சர்வாதிகாரத்துடன் செய்துவருகின்றனர். மீறி தடுக்கும் நில உரிமையாளர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். செய்தி சேகரிக்க செல்லும் செய்தியாளர்கள் மீதும் காவல்துறையினர் அராஜக போக்கில் செயல்படுகின்றனர்.

இந்நிலையில் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 1-ந்தேதி (நாளை) திருவண்ணாமலையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக தகவல் பரவிவருகிறது. இதனையறிந்த அம்மாவட்ட காவல்துறை, அம்மாவட்ட மாணவர்களை போராட்டம் செய்ய கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், திருவண்ணாமலையைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டு போராட்டத்தை தூண்டும் வகையில் சமூக வலைத் தளங்களில் தகவல்களை பரப்புவதாகவும், பசுமை வழிச்சாலை திட்டம் பற்றி அவதூறு பரப்புவதோடு, மக்களை திசை திருப்பும் முயற்சியில் சிலர் வதந்தி பரப்புவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, திருவண்ணாமலை பேகோபுரத் தெருவை சேர்ந்த விஜயகுமார், வேளுகானந்தல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் பவன்குமார் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் தான் ''8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் இளைஞர்கள் வருகிற 1 ஆம் தேதி {நாளை} ஒன்றிணைய வேண்டும்'' என்று சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரப்பி உள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த மூவரை விசாரணை செய்ததில், சென்னையை சேர்ந்த செல்வராஜ் என்பவரும், ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்து உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் கதிர்வேல் (27) என்பவரும், சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பியது கண்டுபிடிக்கபட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SALEM TO CHENNAI 08 WAY ROAD protest police arrest 5 people


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->