சேலத்தில் விடிய விடிய கொட்டிய மழையால் நடந்த சோகம்! - Seithipunal
Seithipunal


சேலத்தில் இன்று விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் பெண் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பசலனத்தால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலத்தில் இன்று காலை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளமாக மழை நீர் ஓடுகிறது. 

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழைநீரில் மூழ்கி சன்னியாசிகுண்டுவை சேர்ந்த புஷ்பா என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல் துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் 36.28 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 13.38 செ.மீ., ஏற்காட்டில் 11.68 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் சராசரியாக 2.4 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sadness caused by the morning rain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->