ஆண்டாள் விவகாரம் : கையிலெடுத்த சோடா பாட்டில், கண்ணாடியால் சர்ச்சையில் சிக்கிய ஜீயர்! - Seithipunal
Seithipunal


ஆண்டாள் சர்ச்சை குறித்து நாமக்கல்லில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் சடகோப ராமானுஜ ஜீயர் தேவைப்பட்டால் நாங்களும் சோடாபாட்டில் வீசுவோம் என்று தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாளை அவமதித்ததாகக் கூறி தொடர்ந்து பல்வேறு இந்து அமைப்புகள் அவருக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றன.

இதனிடையே வைரமுத்து இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்திலும் வருத்தம் தெரிவித்திருந்தார். இருப்பினும், தொடர்ந்து அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் ஒரே நாளில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட அவர் வரும் பிப்ரவரி மாதம் 3-ம் தேதிக்குள் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குவந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடு விதித்திருக்கிறார்.

கூறியது போல் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால், நானும் ஆண்டாள் பக்தர்களும் ஒன்று திரண்டு கோயில் முன் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவோம் என்றும் ஆண்டாளுக்காக நாங்கள் எங்களது உயிரை விடவும் தயாராக உள்ளோம் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சடகோப ராமானுஜ ஜீயர், ஆண்டாளை அவதூறாக பேசிய கவிஞர் வைரமுத்து ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வைரமுத்து மன்னிப்பு கேட்கும்வரை நாம் அறவழியில் போராடுவோம் எண்டுறம் கூறினார்.

மேலும் அவர், ஆண்டாளின் பிள்ளைகளான உங்களுடைய அனைவருக்கும் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். எந்த ஒரு கடவுளையும் இனி யாரும் மேடை போட்டு கொண்டு அவதூறாக பேசக் கூடாது. அப்படி பேசினால் நாம் அனைவரும் அங்கு சென்று போராடுவோம்.

நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கும்போது நான் சொல்வது போன்று நீங்கள் அனைவரும் செய்யுங்கள். இந்தக்காலத்து சாமியார் எல்லாம் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார்கள். தற்போதெல்லாம் தேவைப்பட்டால் நாங்களும் கண்ணாடி விடுவோம்.. எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும்... எல்லாவற்றையும் வெளிப்படையாகவே சொல்லிவிடுவோம். ஆனால், நாம் அவ்வாறு செய்யக்கூடாது. நாம் எப்போதும் அறவழியில் தான் போராட வேண்டும் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sadakoba jeeyar speech issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->