220 கோடி ரூபாய் செலவு.!! ஜல்லி மட்டுமே மிச்சம்., கொதிக்கும் மக்கள்.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவை பொறுத்த வரையில் நாட்டின் முன்னேற்றம் எந்த விதத்தில் உயர்த்தப்பட்டாலும்., இன்று வரை குண்டும் குழியுமான சாலைகளுக்கு தீர்வு காணப்படாமல் தான் உள்ளது. ஏனெனில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக வெளியான அறிவிப்பில் இந்தியாவில் உள்ள தரமற்ற சாலைகளால் ஏற்படும் விபத்துகளில் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர் அல்லது உயிரிழக்கின்றனர் என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த தகவலை கடுமையாக கண்டித்த நீதிபதிகள் "நாட்டின் எல்லையில் ஏற்படும் உயிரிழப்புகளை விட தரமற்ற சாலைகளால் ஏற்படும் உயிரிழப்புகள் தான் அதிகமாக உள்ளது" என்று தெரிவித்தனர். அந்த வகையில் நாட்டில் புதியதாக அமைக்கப்படும் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் போன்ற பணிகள் அனைத்தும் சில சமயங்களில் அந்தந்த கட்டிடதரர்களின் சுய இலாபத்திற்க்காக தரமற்ற சாலைகள் அமைக்கப்படுகிறது. 

அந்த வகையில்., அமைக்கப்படும் சாலைகள் அனைத்தும் அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே குண்டும் குழியுமாக மாறுவதை நாம் அறிவோம். அதே போலவே தற்போது மார்த்தாண்டத்தில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தில் ஜல்லி கற்கள் அனைத்தும் பெயர்ந்து மோசமான நிலையில் இருப்பதாக அங்குள்ள மக்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் இருந்து கேரளாவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும். இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும்., தமிழக மற்றும் கேரளாவிற்கு இடையில் விரைவாக பயணம் செய்வதற்கும் ரூ.220 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டது. 

இந்த பாலமானது கட்டப்பட்டு சென்ற 19 ம் தேதி முதலாக வாகனங்கள் பயணம் செய்ய துவங்கியது. இந்த பாலத்தின் வழியாக கேரளாவிற்கு செல்லும் கனரக வாகனங்களில் இருந்து பல வாகனங்கள் சென்று வரும் நிலையில்., பாலத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்ட சாலையில் உள்ள ஜல்லி கற்கள் அனைத்தும் முழுவதுமாக பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. 

இதற்கு கடுமையான முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கொண்டு உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். மேலும்., வாகனங்கள் பயணிக்க தொடங்கிய சில நாட்களிலேயே புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தில் இருக்கும் ஜல்லி கற்கள் அனைத்தும் பெயர்ந்து குண்டும் குழியுமாக சாலை மாறியுள்ளதால் அந்த பகுதி மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RS.220 CRORES FOR A BRIDGE CONSTRUCTION


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->