மெய்சிலிர்க்க வைத்த பிரபல நடிகர்!! முதலாவதாக வீராங்கனை கோமதிக்கு அன்பளிப்பு!! - Seithipunal
Seithipunal


தமிழக வீராங்கனை கோமதி ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இதற்கு அவருக்கு தமிழகத்தின் பல்வேறு தலைவர்களும்,இந்திய அரசியல்வாதிகளும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் அளித்து வருகின்றனர்.

ஆனால், அவருக்கு பரிசுத்தொகை அளிப்பதாக எந்த பிரபலங்களும் தகவல் அளிக்காத நிலையில், நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர், "தந்தை இறந்து, பயிற்சியாளரையும் இழந்தாலும், தன்னம்பிக்கையை மட்டும் இழக்காமல் விடாமுயற்சி செய்து கோமதி இந்த பரிசை பெற்றுள்ளார்.

நானும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் தான். எனக்கும் தெரியும். அந்த வலி எப்படி இருக்கும் என.. எனவே, எனது அன்பு சகோதரிக்கு, என்னால் இயன்ற பரிசாக ரூபாய் ஒரு லட்சம் அன்பளிப்பாக வழங்க இருக்கிறேன். இதற்கு ஒரு தமிழனாக நான் பெருமைப்படுகிறேன்." என வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதிக சம்பளம் வாங்கும் பெரிய திரைபிரபலங்கள் கூட, கோமதிக்கு அன்பளிப்பு வழங்க முன் வராத நிலையில் ரோபோ சங்கரின் இந்த செயல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இதேபோல புல்வாமா தாக்குதலின் போதும் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு ரோபோ ஷங்கர் உதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

robo shankar helps to gomathi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->