துாத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடல்களில் இருந்த தோட்டாக்கள் சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப் பட்டது….! - Seithipunal
Seithipunal


 

கடந்த மே மாதம், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, மிகப் பெரிய அளவில் துாத்துக்குடியில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம், கலவரமாக மாறியது. அதனைத் தொடர்ந்து, கலவரத்தைக் கட்டுப் படுத்த கண்ணீர் புகையும் வீசப்பட்டது.

இதனால், துாத்துக்குடி நகரமே, கலவர பூமியானது.

திடீரென்று, இந்தக் கலவரத்தை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில், 13 பேர், உயிர் இழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு, நாடெங்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன. அனைத்து எதிர்க் கட்சிகளும், இந்த துப்பாக்கி சூட்டைக் கண்டித்து போராட்டம் நடத்தின. இதனால், இந்த துப்பாக்கி சூடு, யார் சொல்லி நடத்தப் பட்டது? எதற்காக இத்தனை கொலைகள்? என்ற கேள்விகளுக்கு, இது வரை விடை கிடைக்கவில்லை.

இது பற்றி விசாரணை நடத்த சி.பி.ஐ.-க்கு உத்தரவிட்டது, நீதி மன்றம்.

இதனைத் தொடர்ந்து, துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. தற்போது, தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.

இறந்த 13 பேரின் உடல்களும், துாத்துக்குடி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தான், பிரேதப் பரிசோதனை செய்யப் பட்டன.

சி.பி.ஐ. கேட்டுக் கொண்ட படி, இறந்தவர்களின் உடலில் இருந்த துப்பாக்கி குண்டுகள், மற்றும் துப்பாக்கி குண்டு சிதறல்களை, அவர்களிடம், மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்ட விசாரணையை நடத்த உள்ளது, சி.பி.ஐ.

தேர்தலுக்குள் இந்த விவகாரம் பலரைக் கூண்டில் ஏற்றும், என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rible bullets were handed over it to C.B.I.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->