ஆளும் அரசின் கழுத்தில் அரசு ஊழியர்கள் வைக்கப்போகும் கத்தி..? ஒட்டு மொத்தமாய் எடுத்த முடிவு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், அரசுக்கான வீட்டு வரி, நிலவரி உள்ளிட்டவற்றை கணக்கிட்டு அவற்றை பொதுமக்களிடம் இருந்து பெறும் துறை வருவாய்த் துறையாகும்.

இது தவிர, சான்றிதழ்கள் வழங்குதல், மாநிலத்தில் ஏற்படும் பேரிடர்களின்போது மக்களை காப்பதும், அவர்களுக்கான நிவாரணத்தை வழங்குவதும் இத்துறையின் பணிகளாகும்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுனாமி தாக்கியபோது, தமிழக அரசு சார்பில் மக்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோல், மத்திய அரசு மற்றும் உலக வங்கி, ஆசிய வள வங்கியின் ஆதரவுடன் தன்னார்வ தொண்டு அமைப்புகளும் நிவாரணப் பணியில் இறங்கின. வருவாய்த்துறை, இத்திட்டங்களை கண்காணித்து செயல்படுத்தியது.

குடிமைப் பொருள் வழங்கல், சமூகப் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்டவற்றையும் நிறைவேற்றுவதால் இந்தத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு அதிக பணிச்சுமை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

இதில், அரசின் கவனத்துக்கு எங்களின் கோரிக்கைகளைக் கொண்டு செல்லும் விதமாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இதன் பின்னரும் அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக பிப்ரவரி 7 மற்றம் 8-ம் தேதிகளில் அலுவலக உதவியாளர்கள் முதல் வட்டாட்சியர் வரை கலந்து கொள்ளும் ஒட்டு மொத்த விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்று தெரிவித்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

revenue department staffs decision against govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->