கும்பகோணம் உடையாளூரில் ராஜராஜசோழனின் நினைவிடத்தில்., ஆராய்ச்சி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!!  - Seithipunal
Seithipunal


மதுரை உயர்நீதிமன்றத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர், மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "சோழ வம்சத்தின் மாபெரும் பேரரசர், முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சி செய்த காலகட்டத்தில், கட்டிட கலை, இலக்கியம், சமயம் மற்றும் நுண்கலை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியது.

தஞ்சை பெரிய கோயிலில் இதற்கான சான்றுகள் உள்ளது. ஆனால், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உடையாளூர் என்ற கிராமத்தில் அவரது நினைவிடம் பராமரிப்பின்றி சிதைந்து கிடக்கிறது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. அங்கு முறையாக தொல்லியல் ஆய்வு நடத்தினால், சோழர்களின் வரலாறு சான்றுகள் கிடைக்கும். 

அவருடைய புகழை நிலை நிறுத்தும் வகையில், ராஜராஜசோழனின் சிலையை வங்க கடல் பகுதியில் அல்லது இந்திய பெருங்கடல் பகுதியில் அமைக்க உத்தரவிட வேண்டும்" எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது, 'கும்பகோணம் உடையாளூர் பகுதியில் உள்ள ராஜராஜசோழனின் உடலை அடக்கம் செய்ததற்கான சான்றுகள் இல்லை' என்று அரசு சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், நீதிபதிகள், "முழுமையாக ஆய்வு செய்து செய்யாமல் இதனை முடிவு செய்யக்கூடாது. எனவே, தமிழக அரசின் தொல்லியல் குழுவினர் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ராஜராஜசோழன் நினைவிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என கூறி வழக்கை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

research of kumbakonam udaiyalur rajaraja cholan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->