கலெக்டரின் காரை ஜப்தி செய்ய விடாமல் தடுக்க, மூடப்பட்ட கலெக்டர் அலுவலக வாசல் கேட்….! - Seithipunal
Seithipunal


 

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் காளையப்பா நகரைச் சேர்ந்தவர் முகமது காசிம் (வயது 63). இவருக்கு சொந்தமான இடத்தை, கடந்த 1998-ஆம் ஆண்டு, ஆதி திராவிடர் நலத் துறை கையகப் படுத்தியது. ஆனால், இதற்குரிய இழப்பீடு அவருக்கு வழங்கப்படவில்லை.

அதனால், முகமது காசிம், இழப்பீடு கோரி, வழக்கு தொடர்ந்தார். 20 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில், முகமது காசிமுக்கு, 26,36,000 ரூபாய் வழங்க வேண்டும், என்று, நீதி மன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அப்படியும், இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற ஊழியர்கள், சிவகங்கை கலெக்டரின் காரை ஜப்தி செய்ய வந்தனர். ஆனால், அவர்களை உள்ளே வர விடாமல் தடுப்பதற்காக, கலெக்டர் அலுவலகத்தின் கேட் வாசல் திடீரென்று மூடப்பட்டது. இதனால், பொது மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.

கலெக்டர் அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்கள், பின் புறமாக, உள்ளே சென்றனர்.

இதற்கிடையே, அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக, சிவகங்கை கலெக்டரின் சார்பில், நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

refused to accept the judgement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->