போச்சு... "சவுக்கு சங்கர்" தான் காரணம்.. பல்டி அடித்த ரெட் பிக்ஸ்.!! ஜேன் பெலிக்ஸின் பரபரப்பு கடிதம்.!!
Red Felix GM apologized for alleged on women police
பெண் காவலரை இழிவாக பேசிய சவுக்கு சங்கர் மற்றும் அவரைப் பேட்டி எடுத்த பிலிப்ஸ் ஜெரால்ட் ஆகியோரை தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து மச் கோவை மத்திய சிறையில் அடைத்துள்ள நிலையில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிரித்து மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மே 14ம் தேதி ரெட்பிக்ஸ் அலுவலகத்தில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் 25க்கும் மேற்பட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பெண் போலீசார் குறித்து சவுக்கு சங்கர் பேசியதற்காக வெளிச்சத்தின் மனைவியும் ரெட் பீச் நிறுவனத்தின் நிர்வாக மேலாளருமான ஜேன் பெலிக்ஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மன்னிப்பு கடிதத்தில் "சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சில் ரெட் பிக்ஸ்க்கு உடன்பாடு இல்லை, அது ரெட் பிக்சின் கருத்தும் இல்லை. இருப்பினும் இந்த காணொளியால் காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் வருத்தம் அடைந்து இருப்பதால் ரெட் பிக்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.
கடந்த 30 4 2024 அன்று why South media is targeted? என்ற தலைப்பில் நமது ரெட் பிக்ஸ் ஊடகத்தின் ஆசிரியர் பெலிஸ் ஜெரால்ட் சவுக்கு சங்கரி நேர்காணல் எடுத்தார்.
அந்த நேர்காணலில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்று பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்து தானே தவிர ரெட் பிக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல. பெண்களின் மாண்பையும் சுயமரியாதையும் மிக உயர்வாக ரெட் பிக்ஸ் ஊடகம் கருதுகிறது.
சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல்துறையில் பணியாற்றுப் பெண்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த காணொளியை ஒளிபரப்பு எதற்காக ரெட் பிக்ஸ் ஊடகம் மனம் திறந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. சர்ச்சைக்குரிய அந்த காணொளி வழக்கு நிலுவையில் உள்ளதாலும் காவல்துறை விசாரணைக்கு தேவைப்படுவதாலும் வேறு யாரும் பார்க்காத வண்ணம் பிரைவேட் செய்யப்பட்டுள்ளது" என அந்த மன்னிப்பு கடிதத்தில் ஜேன் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்
English Summary
Red Felix GM apologized for alleged on women police