அபிநந்தனை மீட்க இந்திய தூதரகத்திற்கு ஆலோசனை!! பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி!!  - Seithipunal
Seithipunal


இந்திய எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தான் விமானங்கள் குண்டு வீசியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் நுழைந்து குண்டு வீசியுள்ளது. இந்திய ராணுவம் முகாமிட்டு இருந்த பகுதி அருகே வீசியுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 

பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலுக்கு இந்திய இராணுவம் நடத்திய பதில் தாக்குதலில், பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தியதாக இந்திய ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. 

அதேபோல், இந்தியா எல்லையில் நான்கு இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தான் வெளியிட்டஅதிகாரப்பூர்வ அறிவிப்பில், பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று நுழைந்த இரு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தபட்டுள்ளது.

வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹி ரட்டா பகுதியில் விழுந்து உள்ளது. மற்றும் ஒரு போர் விமானம் இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்குள் விழுந்து உள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் விழுந்த இந்திய போர் விமானத்தில் வந்த இரு விமானிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கைதான மற்றொரு இந்திய விமானியிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய பெயர் அபினந்தன் என்றும், விமானப்படையில் தனது பணி விமானப்படை விங் கமாண்டர் அதிகாரி என்றும், அடையாள எண் (service No) எண்: 27 981 என்று அபினந்தன் கூறும் வீடியோ மற்றும் அவரது புகைப்படங்களை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.

அவரை, மீட்க கோரி இணையத்தளத்தில் #டேக் வைரலாகி வருகிறது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில், அவரை மீட்க கோரி, "பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானப் படை விமானியும், சென்னையைச் சேர்ந்தவருமான அபிநந்தனை உடனடியாக மீட்க இந்திய அரசு தூதரக முயற்சிகளின் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும்." என ட்வீட் செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramadoss supports to abinandhan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->