ராஜீவ் கொலை குற்றவாளிகள் 3 பேர் இன்று இலங்கை பயணம்.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனைவரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சாந்தன் மட்டும் உடல் நல குறைவு காரணமாக மரணமடைந்தார். 

நளினி மட்டும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மற்ற அனைவரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த தங்களை மீண்டும் தாய் நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இலங்கையைச் சேர்ந்த மூவரின் பாஸ்போர்ட் கிடைத்துள்ளதால் விரைவில் அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தார். 

அதன்படி இலங்கை துணைத் தூதரகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற பாஸ்போர்ட்டின் அடிப்படையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் ராபர்ட் பையர்ஸ் ஜெயக்குமார் ஆகியோர் இன்று விமான மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து நேற்று இரவு 11:15 மணி அளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் இன்று காலை 10 மணி அளவில் சென்னையில் இருந்து கொழும்பிற்கு செல்லும் இலங்கை விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajiv Gandhi murder convicts will travel to Sri Lanka today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->