தேடப்பட்டு வந்த ராஜராஜன் சிலை மீட்பு பின்னணி..! - Seithipunal
Seithipunal


கோயிலில் உள்ள சிலைகள் எல்லாம், நமக்கு தான் கடவுளாகத் தெரிகிறது. ஆனால், இதனைப் பாதுகாத்துப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள அறநிலைத் துறையினருக்கு, அது விலை மதிப்பற்ற உலோகச் சிலையாக மட்டுமே தெரிகிறது.

அதனால் தான், சிலை செய்வதில் மோசடி, சிலை திருட்டு போன்ற விவகாரங்கள் நடைபெற்றுள்ளன. அவை எல்லாம் காலம் கடந்து, இப்போது வெளி வரத் துவங்கியது குறித்து, பொது மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

தஞ்சையில் புகழ் பெற்ற ராஜராஜ சோழனின் சிலை மற்றும், அவரது மனைவியான மாதேவியர் சிலைகள் எல்லாம் 50 வருடங்களுக்கு முன்பாக திருடு போய் விட்டன. பல தொல்லியல் ஆய்வாளர்கள், தஞ்சையில், ராஜரானின் சிலை உள்ளது, என்று தெரிவித்துள்ளனர்.

ராஜரானின் உருவம் எப்படி இருக்கும் என்ற ஆவலில், அனைவரும், அந்த சிலையைப் பார்க்க ஆவல் கொண்டனர். ஆனால், அது கண்ணில் படவேயில்லை. தற்போது அந்த சிலைகள் எல்லாம், குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேசன்- காலிகோ மியூசியத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது, தெரிய வந்தது.

இந்த சிலை திருட்டு, கடந்த 50 ஆண்டுகளாக, இந்து அறநிலையத் துறையினரால் மறைக்கப் பட்டுள்ளது. சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார், சிலைகள் குறித்து கணக்கு எடுத்த போது தான், இந்த சிலைகள் மாயமான செய்தியே தெரிய வந்துள்ளது. இந்த சிலைகளின் மதிப்பு, இன்றைய தேதிக்கு, 150 கோடி ரூபாய் பெருமானமுள்ளது.

இந்த சிலைகளை, தஞ்சை அருகே உள்ள சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த, ராவ் பகதுார் சீனிவாச கோபாலாச்சேரி, சென்னையில் உள்ள கவுதம் சாரா பாய்க்கு பல கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார்.
 

இந்த சிலைகளை இன்று, அகமதாபாத் மியூசியத்திலிருந்து, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார், சென்னைக்கு கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சிலை திருட்டு தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RAJARAJAN STATUE FIND STORY


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->