சென்னையில் பலத்த காற்று வீசும்! 2 நாட்களுக்கு கனமழை! புயல் குறித்த முழு விவரம் !! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறுகிறது. இந்த புதிய புயலால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னைக்கு அருகே 690 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் நிலைக்கொண்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னைக்கு அருகே 690 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் நிலைக்கொண்டுள்ளது. 

சென்னையில் தரைக்காற்று பலமாக வீசும். 45 முதல் 55 கி.மீ. வரை தரைக்காற்று பலமாக வீசும். அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்.

புதிய புயலால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்;  தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். 

மீனவர்கள் டிசம்பர் 17 வரை வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்; வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் ஆந்திரா நோக்கி செல்கிறது. 

டிசம்பர் 17ம் தேதி ஓங்கோல் - காக்கிநாடா இடையே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு சென்னை வானிலை மையம் செய்தி வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rain Update : Chennai Meteorological Dept


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->