சற்றுமுன் சில்லென்று மாறிய சென்னை.!! சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகள்..!! - Seithipunal
Seithipunal


வடமேற்கு வங்க கடல் பகுதியில் ஒடிசா அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் என்றும் தேனி, திண்டுக்கள், நெல்லை. கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக நேற்று சென்னை வானிலை மையம் எச்சரித்து இருந்தது.

மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், சற்றுமுன் (23.07.2018) கடந்த ஒரு மணி நேரமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கிண்டி, குன்றத்தூர், போரூர், முகலிவாக்கம், காரம்பாக்கம் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. திடீரென பெய்த இந்த மழையால், வேலைக்கு சென்று வீடு திரும்பிய மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்து நெரிசலும் அதிகமானதால் ஒரு மணி நேரம் சென்னை போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. கடந்த 10 நாட்களுக்கு முன் சென்னையில் தொடர்ந்து 4 நாட்கள், மலை நேரங்களில் மழை பெய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RAIN IN CHENNAI


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->