எழுதிக்கொடுத்த கேள்விகளை ராகுல் காந்தியிடம் கேட்ட மாணவிகள் - சந்தி சிரிக்கும் காங்கிரஸ் நிகழ்ச்சி : பொதுவெளியில் அசிங்கப்பட்ட பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேற்று தமிழகம் வருகை தந்தார். முதலில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

அப்போது, மாணவிகளின் கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, காஷ்மீர் விவகாரம், பொருளாதாரம் என்று பல்வேறு விவகாரங்களில் மாணவிகளின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது பேசுகையில், என்னிடம் எளிதான கேள்விகளை கேட்க வேண்டாம் கடினமான கேள்விகளை கேளுங்கள் என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

இந்த வாசகத்தை காங்கிரஸ் ஆதரவாளர்கள் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்து ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கு அக்கல்லூரியில் படிக்கும் மாணவியின் தந்தை ஒருவர் பதிலலித்துள்ளார். அதில் ' மாணவிகளுக்கு கேள்வி கேட்க எல்லாம் அனுமதி கிடையாது. முன்னரே தயார் செய்யப்பட்ட கேள்விகளை தான் மாணவிகளை வைத்து கேட்க சொல்கின்றனர்.

என் மகளும் அந்த கல்லூரியில் தான் படிக்கிறார்' என்று கூறியுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் இதே போல ராகுல் காந்தி மாணவ, மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்துள்ள நிலையில், இச்சம்பவத்தின் மூலமாக காங்கிரசின் ஒட்டுமொத்த செயல்பாடுகளின் நம்பகத்தன்மை மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rahul-gandhi-on-neet-issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->