புதுக்கோட்டை மக்களை சோகத்தில் ஆழ்த்திய செய்தி.! ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு.!! - Seithipunal
Seithipunal


நாளை (2.1.2019) புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்க இருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அரசு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். 

தமிழக மக்களின் ஒற்றுமையான போராட்டத்திற்கு பின் கிடைத்த ஜல்லிக்கட்டு போட்டி இந்த வருடம் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், இந்த அவருடத்திற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் 3 இடங்களை அறிவித்தது. 

அதில், வரும் தை மாதம் (ஜனவரியில்)  நடைபெற உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியானது, ஜனவரி, 15ம் தேதி - அவனியாபுரத்திலும், 16ம் தேதி -  பாலமேடு-விலும்,  17ம் தேதி - அலங்காநல்லூரிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் வாரியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஆங்கிலேயர்களின் புத்தாண்டான இன்று அரியலூர் மாவட்டம், மலத்தான்குளத்தில் இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிலையில், நாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்க இருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அரசு அதிகாரிகள் அனுமதி மறுத்து இருப்பது அம்மாவட்ட மக்களை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் நாளை (ஜனவரி 2-ஆம் தேதி) ஜல்லிக்கட்டு நடைபெரும் என்று அறிவிக்கப்பட்டு அணைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காததால் ஜல்லிக்கட்டு போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மேலும், இதற்கு அம்மாவட்டத்தை சேர்ந்த ஒரு அமைச்சர் தான் காரணம் என்றும், அவரின் ஊரில் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்த பின், அம்மாவட்டத்தில் உள்ள மற்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்ற ரகசிய உத்தரவு வந்ததது தான் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அடுத்த செய்தி: 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthukottai jallikattu postpone


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->