புதுக்கோட்டை: விவசாய கடன் தள்ளுபடி.! நேற்று ஒரே இடத்தில் குவிந்த 50 ஆயிரம் பேர்.!!  - Seithipunal
Seithipunal


கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தாக்கத்தால், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. இன்று வரை இயல்பு நிலைக்கு மாற முடியாமல் விவசாயிகள் கடும் துயரத்தில் உள்ளனர்.

சமீபத்தில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கஜா புயல் பாதிப்பு காரணமாக ரத்து செயப்பட்டது. கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயக் கடன், கல்வி கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை அரசியல் கட்சியினரும், மக்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படுவதாக வெளியான செய்தியால் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் குவிந்ததனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''கடன் தள்ளுபடி செய்வது அரசின் கொள்கை முடிவு. தமிழக அரசு இதுவரை எந்த கடன் தள்ளுபடி செய்வது குறித்து, எந்த அறைவிப்பாயும் வெளியிடவில்லை. கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மட்டுமே தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் கடன் தள்ளுபடி போன்ற வதந்தி செய்திகளை நம்பவேண்டாம். இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUTHUKOTTAI DISTRICT COLLECTOR WARN TO FAKE NEWS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->