தூத்துக்குடியில் வரலாறு காணாத புரட்சி வெடித்துள்ளது..! - Seithipunal
Seithipunal


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் 100-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் தூத்துக்குடியில் இன்று ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

தூத்துக்குடியில் இயங்கி வரும் "வேதாந்தா" நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இதற்கிடையே ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும், கிராம மக்களுக்கு நோய்கள் பரவுவதாகவும் கூறி, ஆலையிலன் விரிவாக்கத்துக்கு அனுமதிக்க கூடாது என்றும், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் நேற்று 92வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டியுள்ளனர். 

இதுதவிர ஆலையை மூட வலியுறுத்தி அருகிலுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அ.குமரெட்டியாபுரம் மக்கள் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியது. இதையடுத்து போராட்டக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் இணைந்த மக்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். 

போராட்ட அறிவிப்புகளை அடுத்து நகரின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையையும் மீறி இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி இன்று போராட்டத்தில் பங்கேற்க சென்ற மடத்தூர் கிராம மக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பொதுமக்களுக்கும் காவல் துரையின் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுயுள்ளது. 

தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் மக்களை கலைக்க முயன்றனர். அப்போது பொதுமக்கள் காவல் வேனை கவிழ்த்ததோடு, தாக்கவந்த காவலர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். 144 தடை உத்தரவை மீறி ,18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பிரமாண்ட முற்றுகை பேரணியை நடத்தி வருகின்றனர். மக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய காவல் துறை பின்வாங்கி விட்டனர். அத்தனை தடுப்புகள், தடியடிகளை தாண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் தற்போது போராட்டக்கார்ரகள் நுழைந்துள்ளனர். 

இந்த நிலையில் பொதுமக்களை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் பலியாகியுள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட வாகனங்களை பொதுமக்கள் சூறையாடி உள்ளனர். 


செய்திகளை சேகரிக்க முயன்ற செய்தியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆயிரகணக்கான பொதுமக்கள் கருப்புக்கொடியுடன் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

தொடர்ச்சியாக பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருவதால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUBLIC STRUGGLE AGAINST STERLIST


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->