அரசு கண்டுகொள்ளாததால் மக்களே களத்தில் இறங்கினர்!. ஆளும் தமிழக அரசை கழுவி ஊத்தும் மக்கள்!. - Seithipunal
Seithipunal



அரசு செய்யும் நலத்திட்டங்கள் எதுவும் கிராம பகுதிகளுக்கு முழுசாக சென்றடைவதில்லை. சில பகுதிகளில் பாசன குளங்கள் தூர்வாராததாலும், நீர் வரத்துவாரிகள் சீரமைக்கப்படாததாலும் மழை பெய்தாலும் பாசன குளங்கள் நிரம்புவது இல்லை. இதனால் குளத்து பாசனத்தை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் தொடர்ந்து அவதி அடைந்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பச்சைக்கொட்டை, பாப்பன்விடுதி, பொன்னவிடுதி மற்றும் கறம்பக்குடி அருகே உள்ள காடுக்கக்காடு கிராமத்தில் 100 ஏக்கர் பாசன பகுதி கொண்ட மங்கான்குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதேபோல் வரத்துவாரிகளும் பல இடங்களில் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் சமீபத்தில் பரவலாக மழை பெய்தும், குளத்திற்கு போதுமான அளவு மழைநீர் வரவில்லை.

ஆலங்குடி அருகே உள்ள பாப்பன்விடுதியில் வரத்துவாரிகள் அனைத்தும் புதர்மண்டி கிடப்பதால், மழை பெய்தாலும் குளத்திற்கு தண்ணீர் வருவதில்லை. இது குறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியில் நிலத்தடி நீர் இன்னும் குறைவாகவே உள்ளது. அரசு செய்யும் நலத்திட்டங்கள் எதுவும் அப்பகுதிகளுக்கு சென்றடைவதில்லை.

 

இதனால் பருவமழை பெய்தாலும், குளம் நிரம்பாமல் விவசாயம் அழிந்துவிடும்  என்று கருதிய அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசை எதிர்பார்க்காமல், தாங்களே பாசன குளத்தை தூர்வாருவது என்று முடிவு செய்தனர். இதற்காக காடுக்கக்காடு விவசாயிகள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய 50 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை மங்கான் குளத்தை தூர்வாரும் பணி தொடங்கியது. முன்னதாக இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்ய வேண்டியும், குளம் நிரம்பி விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதி விவாசயிகள் கூறுகையில், சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள மங்கான் குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இது குறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் நாங்கள் பலமுறை தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த பகுதியில் உள்ள ஏழை மற்றும் குறு விவசாயிகள். மழை பெய்தால் தான் விவசாயம் செய்யமுடியும் என்ற நிலையில், மழைநீரும் குளத்திற்கு வராமல் வீணாவது எங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விடுகிறது. எனவே இனியும் அரசை நம்பினால் ஏமாற்றம்தான் கிடைக்கும் என நினைத்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்று அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public started work for not considering government


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->