தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சூறை..! நான்கு பேர் கவலைக்கிடம்..!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி அம்மாவட்ட மக்கள் முன்னெடுத்த போராட்டம் இன்று உடன் 100 வது நாளை தொட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாவட்ட சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக பல்வேறு தரப்பினர் கூறிருந்தனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் நேற்று இரவு முதல் தூத்துக்குடி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். 

இன்று காலை போராட்டம் அறிவித்த படியே போராட்டக்காரர்கள்  பேரணியாக மாவட்ட  ஆட்சியரகத்தை முற்றுகையிட பேரணியாக மக்கள் செல்ல முயற்சித்தனர். அவர்களை போலீஸார் மடத்துக்குளம் பகுதி அருகே தடுத்துநிறுத்தினர்.

ஆனால், அதையும் மீறி பேரணியை தொடர பொதுமக்கள் முற்படவே, இதனால் போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸார் மீது பதிலுக்கு கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

பொதுமக்களின் தாக்குதலை தங்க முடியாமல் போலீஸார் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அங்கிருந்த போலீசார் தடியடி நடத்தவே போராட்டக்காரர்கள். கடும் கோபத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை உடைத்து தீயிட்டு கொளுத்தினர். 

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பொதுமக்கள் நான்கு பேர் மீது கொண்டு பாய்ந்தது. அதில் ஒருவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். மூவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public attack in collecter office


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->