“என்னை மிரட்டி போலீசார் வாக்குமூலம் வாங்கினார்கள்”- பேராசிரியை நிர்மலாதேவியின் அதிர்ச்சியான பேட்டி….! அவரை வாயைப் பொத்தி அழைத்துச் சென்ற போலீசார்…! - Seithipunal
Seithipunal


 

கல்லுாரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த குற்றச்சாட்டில், விருதுநகரைச் சேர்ந்த, பேராசிரியை நிர்மலாதேவி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். இவருடன் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில், தமிழக கவர்னர் முதல், மதுரை காமராசர் பல்கலைக் கழக ஊழியர்கள் வரை, முக்கிய புள்ளிகளின் பெயர்கள் அடிபடுகின்றன. இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரி்த்து வருகின்றனர்.

இந்த வழக்கு, ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட மகிளா நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இது வரை, பத்திரிகையாளர்கள் யாருக்கும் பேட்டி கொடுக்காத நிர்மலாதேவி, தற்போது, நீதி மன்றத்திற்கு வந்த போது, செய்தியாளர்களிடம், “நீதி மன்றத்தில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் என்னை மிரட்டி, அவர்களாக வாக்குமூலம் தயாரித்து, அதில் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். ஏதோ உள் நோகத்துடன் எனக்கு ஜாமீன் மறுக்கப் பட்டுள்ளது” என்றார்.

அப்போது நிருபர்கள், “முருகன் மற்றும் கருப்பசாமி பெயரை நீங்கள் தானே கூறினீர்கள்” என்று கேட்டனர். அதற்கு, நிர்மலாதேவி, “நான் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. இதெல்லாம் அவர்களாகப் புனைந்து எழுதியது” என்றார்.

அவர் நிருபர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, மேற் கொண்டு அவரைப் பேச விடாமல், ஆயுதப்படை போலீசார், நிர்மலாதேவியின் வாயைப் பொத்தி நீதி மன்றத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

இதனால், நிர்மலாதேவி நிலை தடுமாறினார். அப்போது அங்கு பரபரப்பாக இருந்தது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

professor Nirmaladevi's statement against C.B.C.I.D.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->