முடி வெட்ட சொன்ன பேராசிரியர்! முடிவுக்கு வந்த மாணவர்! போராட்ட களமான கல்லூரி! - Seithipunal
Seithipunal


இக்காலத்தில், இளைய சமுதாயம் பல விஷயங்களில் சாதித்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு சிலர், தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பெரிது பண்ணி விடுகின்றனர், என்று சமீபத்தில் ஒரு சமூக ஆர்வலர் பத்திரிகையில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சிவகங்கை, அரசு மன்னர் துரை சிங்கம் கல்லுாரியில், இளநிலை இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் கார்த்திக்ராஜா (வயது 20). இவர் தலையில், முடியை மிக அதிகமாக வளர்த்திருந்தார். அதனை, கல்லுாரி பேராசிரியர் எடுத்துச் சொல்லி, அவரை ஒழுங்காக முடி வெட்டி வருமாறு கூறி உள்ளனர். ஆனால், கார்த்திக் ராஜா அதைக் கண்டு கொள்ளவில்லை. மீண்டும், அப்படியே தான் கல்லுாரிக்கு வந்துள்ளார்.

இதனால், கார்த்திக் ராஜாவிடம் சொல்லி, அவரது பெற்றோரை அழைத்து வரும்படி, கூறி உள்ளனர். இதனால் விரக்தி அடைந்த கார்த்திக் ராஜா, நேற்று கல்லுாரிக்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்து, தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

இதனைக் கண்ட சக மாணவர்கள், அவரைக் காப்பாற்றினர். மேலும், ஆத்திரம் அடைந்த மாணவர்கள், கல்லுாரி நிர்வாகத்தையும், பேராசிரியர்களையும் கண்டித்து வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லுாரியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கல்லுாரியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு, பேராசிரியர்கள் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர், தங்கள் போராட்டத்தைக் கை விட்டு, கல்லுாரி வகுப்புகளுக்குச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

professor forced student to cut hair he decide suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->