வேலைவாய்ப்பு முகாம்: வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளவும் அல்லது பகிரவும்..!! - Seithipunal
Seithipunalதமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள்., கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்., தொழிற்பட்டய கல்விக்கான கல்லூரிகள் மூலம் ஒவ்வொரு வருடமும் பல இலட்சக்கணக்கனோர் படிப்பை முடித்துவிட்டு வெளியேறுகின்றனர். அவ்வாறு வரும் நபர்களில் எத்தனை நபர்கள் வேலைக்கு செல்கின்றனர் என்பது தற்போது வரை பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. 

அந்த வகையில் வேலைக்கு செல்லாத நபர்களுக்காக தனியார்துறையின் வேலைவாய்ப்பு நிறுவனமானது மாவட்டம்தோறும் சென்று படித்தவர்களை தேவையான நிறுவனங்களுக்கு வேலைக்கு எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது நாளை அதாவது., (09.11.2018) அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த முகமானது தொடங்க உள்ளது. 

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திரு.கணேஷ் அவர்கள் தெரிவித்ததாவது., புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் அனைவருக்கும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்களை பணியமர்த்தம் செய்வதற்காக முகாம் நடைபெறவுள்ளது. 

இந்த முகமானது நாளை காலை சுமார் 10.30 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து நடைபெறும் என்றும்., பல்வேறு தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய வருவதால் அனைத்து இளைஞர்களும் கலந்து கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு பத்தாம் வகுப்பு பயின்றவர்கள் முதல் பட்டப்படிப்பு பயின்றவர்கள் வரை உள்ள அனைத்து இளைஞர்களும் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று தெரிவித்தார்.  

English Summary

PRIVATE COMPANY EMPLOYMENT OFFER FOR PUTHUKOTTAI DISTRICT YOUNGSTER

செய்திகள்Seithipunal