ஆசிரியர்கள் வராததால் பள்ளிக்கு பூட்டு…! சாலையில் அமர்ந்து பாடம் படிக்கும் மாணவர்கள்….! பொது மக்களின் கடுமையான விமர்சனங்கள்….! - Seithipunal
Seithipunal


 

இன்று தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் கால வரையற்ற போராட்டம் நடத்த அறிவித்துள்ளனர்.

இதில், ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், ஆயிரக் கணக்கில், போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால், தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில், ஆசிரியர்கள் இல்லாமல், மாணவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர்.

திருப்பூரில் உள்ள குமார் நகர் அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர் யாரும் பணிக்கு வராததால், பள்ளிக்கூடம் பூட்டப் பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் சாலையோரம் அமர்ந்து பாடங்களைப் படித்து வருகின்றனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள், ஆசிரியர்களைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். இவ்வளவு சம்பளம் கொடுத்தும் பத்தலேன்னு சொல்றாங்க. நாட்டிலே எத்தனையோ பேரு, ஒரு நாளைக்கு நுாறு ரூபா சம்பாதிக்கிறதுக்கு, எவ்வளவு கஷ்டப் படுறாங்க.

இந்த ஸ்டிரைக் இவங்களுக்கு தேவையில்லாதது. ஜெயலலிதா இருந்தால், இப்படி செய்வாங்களா? என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

primary schools closed due to the teachers strike


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->