அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த ஆரம்ப பள்ளி மாணவர்கள்..! சிறுவர்கள் நுாதன முறையில் போராட்டம்..!! - Seithipunal
Seithipunal


சிவகங்கைக்கு அருகே உள்ள, திருவேளன்குடி கிராமத்தில் 250 குடும்பங்கள் உள்ளன. இந்தக் கிராமத்தில் பள்ளி வசதி இல்லாததால், இங்குள்ளவர்கள், மிகுந்த சிரத்துடன், 8 கி்மீ. துாரத்தில் உள்ள நாட்டரசன் கோட்டைக்கும், காளையார் கோயிலுக்கும், பாதி துாரம் பேருந்திலும், மீதி துாரம் நடந்தும் பள்ளிக்குச் செல்லும் அவல நிலை உள்ளது.


மேலும், அவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில், ஆளில்லாத, லெவல் ரயில் கிராசிங்கும் உள்ளது. எனவே, பாதுகாப்பற்ற சூழ்நிலையில், பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
 

இதனால், திருவேளன்குடியில் ஆரம்பப் பள்ளி ஒன்றைத் துவக்க வேண்டும், என்று, அந்தக் கிராமத்து மக்கள் நீ்ண்ட காலமாகப் போராடி வருகின்றனர். பல முறை, கலெக்டர், மற்றும் கல்வி அதிகாரிகளைப் பார்த்து, மனுக்கள் கொடுத்தும், இது வரை, எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
    

இந்த சமயத்தில், நேற்று, காலை, திருவேளன்குடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான சிறுவர்கள், பள்ளிக்குச் செல்லாமல், திருவேளன்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் முன்பாக, அமர்ந்து போராட்டம் நடத்தி, கோசங்கள் போட்டனர்.
    

அங்கு அமர்ந்திருந்த மாணவர்களில் ஒருவரை, ஆசிரியரைப் போல, நடுவில் அமர வைத்து, பாடம் நடத்தச் சொல்லி, விநோதமாகப் போராட்டம் நடத்தினர். அந்தக் கிராம மக்களும், அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, அங்கு திரண்டிருந்தனர்.
பின், போராட்டம் நடத்திய அந்த மாணவர்களுக்காக, கிராம மக்களே மதிய உணவு தயாரித்து, அவர்களுக்கு வழங்கினர்.
    

ஆனால், இது வரை, இந்தப் போராட்டத்தைக், கல்வி அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்பது தான், வேதனைக்குரிய விஷயம்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Primary School Student Protest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->