கரு கலைந்ததால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..? குடும்ப கட்டுப்பாடு செய்ய சென்று வந்த வினை.! - Seithipunal
Seithipunal


கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்ய வந்த பெண்ணுக்கு அளித்த தவறான சிகிச்சையால் பரிதாபமாக இறந்தார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் உள் மற்றும் வெளி நோயாளிகள் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.

இந்நிலையில் கும்பகோணம் அருகே நந்திவனம் கீழத்தெருவைச் சேர்ந்த தமிழரசன் மனைவி தனலட்சுமி(28). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

அரசு மருத்துவமனையில் குழந்தை கரு கலைந்ததால் கருக்கலைப்பு சிகிச்சையை மருத்துவர்கள் செய்து உள்ளனர். கணவன் மனைவி சம்மதித்து குடும்ப கட்டுப்பாடு செய்ய மயக்க மருந்து கொடுத்துள்ளனர். அ

தில் தனலெட்சுமி இறந்துவிட் டார். உடன் தனலெட்சுமி தாயார் மற்றும் கணவரிடம் இறப்பிற்கான சரியான காரணம் சொல்லாமல் பிண வண்டி ஏற்பாடு செய்து அனுப்பி விட்டனர்.

தகவல் அறிந்த உறவினர்கள் மருத்துமனையை முற்றிகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ குழு முன்பு வீடியோ எடுத்து உடற்கூறு ஆய்வு நடத்த வேண்டும்.

இதுபோன்ற இறப்பு சம்பவங்கள் தொடர்கதையாக இருப்பதால் மருத்துவர்கள் மீதும் மருத்து ஊழியர்கள் மீதும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், ஊழியர்கள் மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றகோரிக்கை வலியுறுத்தி மருத்துவமனை முன்பு  முற்றுகை போராட்டம் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnant women died un-proper medicine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->