அலட்சியமான சிகிச்சையால் நிறை மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த விபரிதம்!. - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் வடிவேல். இவர் கூலிவேலை செய்துவந்துள்ளார், இவருக்கு சசிகலா என்ற 26  வயது நிரம்பிய மனைவி உள்ளார்.

இவர் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அங்கு செவிலியர்கள் கவனக்குறைவாக ஊசி போட்டதால், ஊசியின் பாதிமுனை உடைந்துள்ளது.

இதன் காரணமாக அவருக்கு கையில் தொடர்ந்து வலி ஏற்பட்டுள்ளது. அதன் பின் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது ஊசி இருப்பதை மருத்துவர்கள் ஒப்புகொண்டனர். இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை மருத்துவர்கள் உடனடியாக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து ஊசியை அகற்றியுள்ளனர். அறுவை சிகிச்சை செய்த போதும் கையில் தொடர்ந்து ஏதோ சசிகலாவை உறுதிக் கொண்டு உள்ளது என வடிவேலிடம் கூறியுள்ளார். கணவரோ அறுவை சிகிச்சை செய்ததால், அது மாதிரியான உணர்வு இருக்கும், பின்னர் சரியாகவிடும் என்று ஆறுதல் கூறியுள்ளார்.

இருப்பினும் வலி அதிகமானதால் மருத்துவரிடம் மீண்டு சென்று பரிசோதித்த போது தற்போது மார்பு பகுதியில் ஊசி இருப்பது தெரியவந்துள்ளது. இதை அறிந்து அதிர்ச்சியடைந்த சசிகலா, அறுவை சிகிச்சை செய்வதாக கூறி ஏமாற்றி உள்ளனர். எனக்கு பயமாக உள்ளது என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

மேலும் சசிகலாவின் கணவர் வடிவேல் கூறுகையில், கலெக்டரிடம் இது குறித்து மனு அளித்துள்ளோம். அம்மனுவில் சசிகலா தற்போது கர்ப்பமாக உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளோம். இதனால் தாய்சேய் உயிரை காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளோம் எனவும் கூறியுள்ளார். அறுவை சிகிச்சை செய்து, டாக்டர்கள் ஊசியை அகற்றியதாக கூறிய நிலையில், பெண்ணின் மார்பு பகுதியில் ஊசி இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnant woman was shocked for having injection in her chest.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->