அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தபால் ஊழியர்! முதல்வருக்கு எழுதிய கடைசி உருக்கமான கடிதம்! அதிர்ச்சியில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


நாகர்கோவில் அருகே தெங்கம்புதூர் பணிக்கன்குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சுந்தர மாணிக்கம். இவருடைய மனைவி நேச வடிவு. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 

மேலும்  சுந்தர மாணிக்கம் ஆரல்வாய்மொழி தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர்,ஊர் முழுவதும் தேடிபார்த்து கிடைக்காததால் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சுந்தர மாணிக்கத்தை நேற்று உடையப்பன் குடியிருப்பில் உள்ள ஒரு முந்திரி தோட்டத்தில் அழுகிய நிலையில் போலீசார் கண்டறிந்தனர்.

மேலும் அப்பொழுது அவரது சட்டை பையில் கடிதம் ஒன்று இருந்தது. அந்த கடிதம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை மனுவாக எழுதப்பட்டிருந்தது .

அதில் எனக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு மட்டும் திருமணமாகியுள்ளது. எனது மகள்களின் மேல்படிப்பிற்காகவும், வீடு கட்டுவதற்காகவும் கந்து வட்டிக்கு கடன் வாங்கியிருந்தேன். மேலும் அவர்களிடம் அசலுக்கு மேல் வட்டி கட்டி விட்டேன். கடந்த 4 மாதங்களாக வட்டி கட்ட மிகவும் சிரமப்பட்டேன்.

அதுமட்டுமின்றி கடன் கொடுத்தவர்கள் உடனே பணம் கேட்டு தகாத வார்த்தைகள் பேசினர். இதனால் எனது மனைவி மற்றும் 2 மகள்களுக்கும் மிகுந்த மனவேதனை அடைந்தனர். இதுதொடர்பாக சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் கந்து வட்டிக்காரர்களின் தொந்தரவு குறையவில்லை.இவ்வாறு தினம், தினம் செத்து பிழைப்பதை விட நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளேன் என கடித்ததில் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில், கந்து வட்டிக்காரர்களின் சிலரது பெயர்களை அவர் எழுதி வைத்துள்ளார்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  அந்த கந்து வட்டிக்காரர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

post man wriite letter before suicide


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->