நள்ளிரவில் போடப்பட்ட சாலை.. அதிகாலையில் பெயர்ந்தது.. விடிந்ததும் விளக்குமாறு கொண்டு பெருக்கி தள்ளிய பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் இருந்து தக்கலை செல்லும் சாலை வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டதால் இதில் பயணம் செய்து வந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு  நள்ளிரவு திடீரென சாலை அமைக்கப்பட்டது.

அடுத்த நாளே காலை அப்பகுதி பொதுமக்கள் சாலை நள்ளிரவில் அவசர அவசரமாக தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து அவர்கள் குலசேகரம் மாமூடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த தகவலை அறிந்த குலசேகரம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பொதுமக்கள் , நள்ளிரவில் திடீரென தரமற்ற முறையில் சாலை அமைத்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.

பின்னர் அங்கு வந்த அதிகாரிகள், சாலையை தரமாக அமைக்கலாம் என உறுதியளித்து, ஜெசிபி இயந்திரத்தை கொண்டு தரமற்ற முறையில் போடப்பட்ட சாலையில் இருந்து ஜல்லிகளை அகற்றினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poor road contract done in kumari


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->