மாஸ்டர் பிளான் தயார்.!! பொங்கலுக்கான சிறப்பு விருந்தாக வசூலை எட்டி பிடிக்க முன்னேற்பாடுகள்?.!! - Seithipunal
Seithipunal


இந்த வருடத்தின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 6 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவித்திருப்பதால் சுமார் ரூ.750 கோடிக்கு மதுபான கடைகளில் மது விற்பனையானது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள 4800 க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வரும் நிலையில்., அந்தந்த கடைகளின் விற்பனைக்கேற்றவாறு ஏ., பி மற்றும் சி  என்று தரம் பிரித்து., அதிகளவு மதுபானங்களை இருப்பு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 15 ம் தேதி கொண்டாடப்படும் நிலையில்., மக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு சென்று வர ஏதுவாக நாளையில் இருந்து வரும் 17 ம் தேதி வரை தமிழக அரசானது விடுமுறையாக அறிவித்துள்ளது. இதன் மூலமாக பொங்கலுக்கு ஆறு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. 

இதன் காரணமாக இன்று மதியம் முதல் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் மக்கள் சென்னையில் இருந்து புறப்படுவதன் காரணமாக இந்த வருடத்தில் ரூ.750 கோடி வருமானமாக கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளனர். 

மேலும்., கடந்த வருடத்தில் பொங்கல் மற்றும் போகிப்பண்டிகையன்று ரூ.220 கோடிக்கு மதுவானது விற்பனை செய்யப்பட்டது., அதே போல் இந்த வருடத்தில் விடுமுறை நாட்கள் அதிகம் என்பதால் மதுபான விற்பனை இலக்கானது ரூ.750 ஆக எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pongal wine shop money collection planned by wine shop association


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->