வெறிசோடிய சென்னை! காலியாக உள்ள சாலைகள்! - Seithipunal
Seithipunal


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக, சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்தோடு சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பதால் சென்னை வெறிச்சோடி காணப்படுகிறது.

பொங்கல் பண்டிகை வரும் 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி வழக்கமாக 3 நாட்கள் அரசு விடுமுறை விடுவது வழங்கம். அதேபோல் இந்த ஆண்டும் 15,16,17 ஆகிய 3 தினங்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், 14-ம் தேதி திங்கட்கிழமை போகிப் பண்டிகையன்று பணி நாளாக இருந்தது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடும் வகையில் 14-ம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

மெகா விடுமுறையை கொண்டாட, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal celebration in chennai people


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->