#Breaking: பொள்ளாச்சி வழக்கு தொடர்பான விசாரணையில்., யூடுப் நிறுவனம் விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாகவே., கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு., திருநாவுக்கரசை தேடி வந்தனர். கடந்த 5 ம் தேதியன்று திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., திருநாவுக்கரசிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து வெளியானது. கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளை மயக்கி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

இந்த விஷயம் தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும்., அவர்களிடம் இருந்த காணொளி காட்சிகளில் மூன்று பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மேலும்., திருநாவுக்கரசு கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்தே தன்னிடம் பயிலும் மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து ஆபாச படம் எடுத்ததும்., மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில்., சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் திருநாவுக்கரசின் பண்ணை இல்லம் மற்றும் அவனுடைய இல்லத்தில் அதிரடி சோதனை மற்றும் விசாரணையை நடத்தினர். அந்த விசாரணையில் திருநாவுக்கரசின் இல்லத்தில் இருந்த 10 அலைபேசிகள்., மெமரி கார்டுகள் மற்றும் பென் டிரைவுகள் கைப்பற்றப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான விசாரணையானது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் வெளியான வீடியோ காட்சிப்பதிவுகள் மற்றும் ஆடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகவே., அந்தந்த சமூக வலைதளலங்களுக்கு சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர்., சம்பந்தப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகளை நீக்க கூறியும்., பதில் அளிக்க கூறியும் சம்மன் வழங்கியது.

இதனை ஏற்ற நிறுவனங்கள் வீடியோ மற்றும் ஆடியோ காட்சிகளை நீக்கவே., தற்போது யூடுப் நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பான வீடியோ மற்றும் ஆடியோ காட்சிகள் சுமார் 90 விழுக்காடு அளவிற்கு நீக்கப்பட்டுள்ளதாக பதில் அளித்துள்ளது. இந்த ஆடியோவை பதிவு செய்த நபர் குறித்த தகவலையும் சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் கேட்டு சம்மன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pollachi sexual harassment issue you tube explain CBCID sampan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->