பொள்ளாச்சி வழக்கு பிரச்சனையில்., சி.பி.சி.ஐ.டி காவல் துறை விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை சார்ந்த திருநாவுக்கரசு என்பவன் முகநூலின் மூலமாக பெண்களை காதல் வலையில் விழ வைத்து., அவனது சொந்த ஊரில் இருக்கும் பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து., ஆபாச படம் எடுத்து அவர்களை மிரட்டி தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம் அரங்கேறியுள்ளது. 

இந்த தகவலானது வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்., இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து திருநாவுக்கரசிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அந்த விசாரணையில் அவன் தெரிவித்தாவது., கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2016 ம் வருடத்தின் போது எம்.பி.ஏ பயின்றேன். கல்லூரியில் மாணவிகளுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில்., வட்டி தொழிலில் வந்த வருமானத்தை வைத்து மாணவிகளுக்கும்., தோழர்களுக்கும் ஆடம்பரமாக செலவு செய்து வந்தேன். 

என்னை எந்த விதமான சந்தேகமும் இல்லாமல் நம்பிய பெண்களிடம் அலைபேசி எண்ணை வாங்கி சபரிராஜனிடம் வழங்கிய பின்னர்., சபரி பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி., காதல் வலையில் விழ வைத்து சுற்றுலா சென்று வரலாம் என்று கூறி அவர்களை வரவழைப்பார். எந்த விதமான சந்தேகமும் இல்லாமல் வரும் பெண்களை ஆட்களே இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவார். 

இதற்கு அடுத்தபடியாக அங்கு நடைபெறும் காட்சிகளை அலைபேசியில் மறைந்திருந்து பதிவு செய்து அதனை அவர்களிடம் காட்டி., அவர்களை மிரட்டி அந்த சமயத்தில் பலாத்காரம் செய்து பின்னர் அதனை காட்டியே நகை மற்றும் பணத்தை பறிப்போம்., மீண்டும் அவர்களை வலுக்கட்டாயப்படுத்தி மிரட்டி பலாத்காரம் செய்தோம்.  

இந்த விஷயம் தொடர்பான வழக்கு ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில்., அரசியல் பிரமுகரின் உதவியுடன் காவல் விசாரணையில் இருந்து தப்பினாலும்., கடந்த மாதம் மாணவி ஒருவரை பலாத்காரம் செய்ததில் அவர் அளித்த புகாரின் பேரில் அனைவரும் சிக்கினோம். 

இது குறித்த தகவல் காவல் அதிகாரி மூலமாக தெரியவந்ததை அடுத்து., உடனடியாக நான் மட்டும் எப்படியோ திருப்பத்திற்கு தப்பி சென்றேன். பின்னர் பாதுகாப்பு குறித்த பயத்தின் காரணமாக சமூக வலைத்தளங்களில் காணொளி காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டு வழக்கை திசை திருப்ப நினைத்தேன். ஆனால் காவல் துறையினர் முன்னதாகவே சுதாரித்து விசாரணை மேற்கொண்டு எண்ணை கைது செய்தனர் என்று தெரிவித்தான். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pollachi sexual harassment issue CBCID police investigation documentary


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->