தலைமறைவான அரசு மருத்துவர்கள்! கைது செய்ய முடியாமல் திணறும் காவல்துறை! - Seithipunal
Seithipunal


சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா கடந்த நவம்பர் 7ம் தேதி மூட்டு வலி பிரச்சனை காரணமாக கொளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்பொழுது அவருக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் காயத்திற்கு போடப்பட்ட கட்டு இறுக்கமாக கட்டப்பட்டது. அதிக நேரம் அவ்வாறு இருந்ததால் ரத்த ஓட்டம் இல்லாமல் காலில் ரத்தக்கட்டு ஏற்பட்டது. 

இதன் காரணமாக ஆபத்தான நிலையில் கடந்த 8ம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரியாவுக்கு நவம்பர் 9ஆம் தேதி அறுவை சிகிச்சையின் மூலம் கால் அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரியா நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. இந்த நிலையில் மாணவிக்கு தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தரம் மீது காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்தனர். அரசு மருத்துவர்கள் இருவரும் தலைமறைவான நிலையில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறித்தான விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். 

இரு மருத்துவர்கள் உபயோகித்த செல்போன் சிக்னலை வைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். எனினும் கடந்த 24 மணி நேரமாக தலைமறைவாக இருக்கும் மருத்துவர்களை நெருங்க கூட முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police searching malpractice govt doctor


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->