காதலர் தினத்தில் ஜோடிகளை தொந்திரவு செய்தால் கைது!! போலீசார் அறிவிப்பு., காதலர்கள் கொண்டாட்டம்!!  - Seithipunal
Seithipunal


பொதுவாக பிப்ரவரி மாதம் என்றாலே கல்லூரி மற்றும் இளம்வயதினர் அனைவரும் ஒருவித உற்சாகத்துடன் காணப்படுவர். அதிலும் 10 ம் தேதி முதல் உலகெங்கும் களைகட்ட துவங்கிவிடும்.

காதலர்கள் தங்களது இணைக்கு விலையுயர்ந்த பரிசுகளாக, வண்ண வண்ண ஆடைகள், விதவிதமான பரிசுகள், சாக்லேட்கள், சர்ப்ரைஸ் கிப்ட் என எதையாவது கொடுத்து இம்ப்ரெஸ் செய்ய நினைப்பார்கள்.

என்ன தான் விலை அதிகம் உள்ள பொருட்களை பரிசளித்தாலும் ஒற்றை சிவப்பு ரோஜா எப்பொழுதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும். இந்நிலையில் ரோஜாக்கள் விலை நாளை அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் உல்லாச இடங்களான கோவில்கள், பூங்காக்கள், கடற்கரை மற்றும் உணவகம் என அனைத்திலும் நாளை காதல் ஜோடிகள் மையம் கொண்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 

இதே போல் சென்ற வருட காதலர் தினத்தின் போது, சில அமைப்புகள் மற்றும் போது மக்கள் காதல் ஜோடிகளை போது இடத்தில் ரகளை செய்து அவர்களை வீடியோ எடுத்தும், கோஷங்கள் போட்டும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

எனவே, இந்த ஆண்டு அதுபோன்று போது அமைதியை கெடுக்கும் சம்பவங்களை தவிர்க்கும் விதமாக வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், " நாளை 14-ந் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு  வழிபாட்டுத்தலங்கள், பூங்காக்கள், சுற்றுத்தளங்கள்  மற்றும் உணவகங்களில் காதலர்கள் அதிக அளவில் ஒன்று கூடுவார்கள்.
 
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் செயல்படுவர். கடந்த ஆண்டே காதலர் தினத்தன்று நிறைய எதிர்ப்புகள் கிளம்பியது. 

அவ்வாறு இந்த ஆண்டும்  'காதலர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்' அதன்படி சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில்  ஈடுபடுவோர் மீதும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அதில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police says Donot disturb lovers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->