போலீசுக்கு தண்ணீர் காட்டிய தொடர்கொள்ளையர்கள்!. கணவன் மனைவியின் கைவரிசை!. வளைத்துப்பிடித்த காவல்துறை!. - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பூட்டிய வீட்டை ஒரு கும்பல் நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் புகாராளித்ததால் பொலிசார் இதனை தொடர்ந்து  விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

ஆனால் கொள்ளையர்களை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காத காரணத்தினால் பொலிசார் அந்த கும்பலை பிடிப்பதில் திணறி வந்துள்ளனர். இந்த கும்பல் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தின் எல்லையில் உள்ள வீடுகளிலும் கைவரிசை காட்டியதால், இரு மாவட்ட பொலிசாரும் அந்த கும்பலை பிடிப்பதில் தீவிரம் காட்டி வந்தனர்.

     

முதலில் பூட்டப்பட்ட வீடுகளில் கொள்ளையடித்து வந்த இந்த கும்பல், அதன் பின் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்க ஆரம்பித்துள்ளனர்.

பல இடங்களில் வழிப்பறி, பூட்டப்பட்ட வீட்டில் கொள்ளையடிப்பது என தொடர்ந்து சம்பவம் அதிகரித்து வந்ததால், சொக்கம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைப்பெற்று வந்தது.

காவல்துறையினர் நடத்திய ரோந்து பணியின் போது, கள்ளம்புளி பகுதியைச் சேர்ந்த ரவிகார்த்தி என்பவரின் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவரைப் பிடித்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, இவன் தான் அப்பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் பொலிசார் அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது ரவிகார்த்தி மற்றும் அவரின் மனைவி பிரியங்கா என்பது தெரியவந்துள்ளது.

பகலில் இருவரும் குடியிருக்க வீடு தேடுவதுபோல பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு வந்துள்ளனர். பின்னர், பூட்டை உடைத்துக் கொள்ளையடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்களிமிடமிருந்து சுமார் 40 லட்சம் மதிப்பிலான 194 சவரன் நகைகளை பொலிசார் கைப்பற்றினர். அதன் பின் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police have arrested the couple who were involved in the robbery in two districts and arrested after a long search operation.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->