காவல்துறையின் உச்சகட்ட அத்துமீறல்! உடந்தையாக இருந்த அதிகாரிகள்! வலுக்கும் போராட்டம்! - Seithipunal
Seithipunal


மதுராந்தகத்தை சேர்ந்த பாமக கட்சியை சார்ந்த இளைஞர்கள்  சபரி, கார்த்திக், எழிலரசன் ஆகியோர் ஒரு சிறு தகராறு  வழக்கில் மதுராந்தகம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 3 நாட்களாக சிறையில் உள்ள பாமகவினர் 3 பேரையும், சிறைக்காவலர்கள் மற்றும் வார்டன்கள் கடுமையாக தாக்கியும், உணவு, மருந்து எதுவும் வழங்காமல் அடித்து உதைத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

செய்தியறிந்த பாமக மாநில துணை பொது செயலாளர் பொன்.கங்காதரன், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் கணேசமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் உமாபதி, ராதாகிருஷ்ணன், கோபாலகண்ணன், ஏகாம்பரம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் செங்கல்பட்டு மாவட்ட சிறை முன்பு இரண்டு தினங்களுக்கு முன் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிறையில் உள்ள பாமகவினர் 3 பேரை, தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சிறைத்துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன குரல் எழுப்பினார்கள். 

திடீர் போராட்டம் தகவலறிந்து செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன், டவுன் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்களை, பாமகவினர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இளைஞர்கள் தாக்கபட்ட அன்றே கோட்டாச்சியர் விசாரணை வேண்டும் என்று பாமக சார்பில் மனு  கொடுத்துள்ளனர்.  செங்கல்பட்டில் அந்த மனு  மீது நடவடிக்கைகள் எடுத்த கோட்டாச்சியர் செங்கல்பட்டு தாசில்தார் அவர்களை அழைத்து விசாரனை செய்ய உத்திரவிட்டார்.  நேரில் சிறைச்சாலை சென்று விசாரனை செய்து ஒரு காயமும் இல்லை என சிறைத்துரையுடன் கை கோர்த்து பொய்யான தகவலை பாமகவினர் முன்னிலையில்  கோட்டாச்சியர் அவர்களிடம் வருவாய்துறையே அதிகாரிகளே தெரிவித்துள்ளார்கள். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பாமக இளைஞர்களை நேற்று ஜாமின் வாங்கி வெளியில் அழைத்து வரப்பட்டார்கள். அப்போது அவர்களை பார்த்த அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. உயிருக்கு ஆபத்தான அளவிற்கு சிறையில் கடுமையாக தாக்கியுள்ளது உடலில் உள்ள காயங்கள் காட்டிக்கொடுத்தது. 

இந்த சம்பவம் குறித்து  பாமக மாநில துணைபொது செயலாளர் பொன்.கங்காதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட சபரி, கார்த்திக், எழிலரசன் ஆகியோரை கடந்த 4 நாட்களாக சிறையில் காவலர்கள் கண்மூடித்தனமாக அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார்.  அவர்களது உறவினர்கள், சிறையில் நேராக சந்தித்தபோது, அவர்களுக்கு உடல் முழுவதும் காயம் இருப்பதை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். இருவர் நடக்க முடியாத அளவிற்கு தமிழக சிறை வரலாற்றிலே இல்லாத அளவிற்கு அடித்து துன்புறுத்தியுள்ளார்கள். மேலும்  உணவு, மருந்துகள் கூட தர மறுத்துவிட்டதாக கூறினர். 

மேலும் இந்த செயல் மனித உரிமை மீறல் ஆகும். எதிர்தரப்பினர் புகார் அளிக்காமல் வலிந்து கைது செய்து இளைஞர்களை தாக்கிய காவல் ஆய்வாளர் ஸ்டாலின் அந்தோணி ராஜ் உட்பட சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட நீதிபதி, எஸ்பி, கலெக்டர், சிறைத்துறை இயக்குனர் மற்றும் மனித உரிமை கமிஷனில்  புகார் அளித்துள்ளோம் என்றும், இந்த பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பொய்யான தகவலை அளித்த வருவாய்த்துறை அதிகாரிகள் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று அவர் கூறியுள்ளார். 

இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் கடந்த மூன்று நாட்களாக முதல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. குற்றம் புரிந்த தூக்குத்தண்டனை கைதிகளுக்கு கூட தங்களது கடமையை சரியாக செய்யும்  மனித உரிமை ஆணையம், அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட இவ்வளவு வன்மமான தாக்குதலை கவனத்தில் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாமக தரப்பிலும் அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.

ஜாமினில் வெளிவந்துள்ள இளைஞர்களுக்கு காயம் மிகவும் கொடூரமாக இருப்பதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்ட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police attack pmk youth persons in chengalpet jail, strong protest against police by pmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->