தின்று கொழிக்கும் கார்பரேட் நிறுவனங்கள் - தமிழக பொருளாதாரத்தை மொத்தமாக முடக்க நடக்கும் சதி..?அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு முறையால் சிறு,குறு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உணவுப் பொருள்களுக்கு உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக்கால் ஆன தாள் உறைகள், மேஜை விரிப்புகள், தட்டுகள், குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், உறிஞ்சு குழல்கள், அனைத்து பைகள், கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், குவளைகள், தெர்மாகோல் தட்டுகள்- குவளைகள்ஆகிய 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு இந்த மாதம் 1-ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது.

அதன்படி 1-ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருந்தால், உடனடியாக பறிமுதல் செய்யப்படுவதோடு, சிறு வியாபாரிகளுக்கு ரூ.500முதல் ரூ.5000 வரையிலும், பெரிய வியாபாரிகளுக்கு ரூ.5000 முதல் ரூ.1 லட்சம் வரையும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் ஆங்காங்கே கடைகளில் ரைடு நடத்தப்பட்டு பிளாஸ்டிக் கேரிபேக் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது ,பிளாஸ்டிக் கேரிபேக்கை தடை செய்வது ஒரு விதத்தில் நல்லது தான் ஆனால் அதே நேரத்தில் இதை நம்பி மாவட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

குறிப்பாக ஊறுகாய் பாக்கெட், கருவாடு,வறுகடலை,பொரிகடலை,காரச்சேவு பொட்டணம்,மிக்ஸர் பொட்டணம்,மற்றும் சிறுபலசரக்கு சாமான் பொருட்கள் கிராமங்களில் ஏழைகள் மற்றும் விவசாயிகள் இதை வாங்கி பயன் பெற்று வந்தனர்.

இது போன்று கெட்டு போகாத உணவு பொருட்களைபாக்கெட் முறையில் விற்பனை செய்யும் சிறு குறு தொழிலாளர்கள் முழுமையாக தொழிலை இழந்துள்ளனர் என்பதை பார்க்க முடிகிறது.

படித்த இளைஞர்கள் வேலை இல்லா பட்டதாரிகள் இது போன்ற சிறுகுறு தொழிலாளர்களாகவும் சிறிய அளவில் தொழில்முனைவோராகவும் இதுவரை திகழ்ந்துவந்தனர்.

தற்போது இந்த புதிய அறிவிப்பால் முற்றிலும் வேலை இழந்துள்ளனர். இதுதவிர பலசரக்கு கடைகளில் பலசரக்கு சாமான்களை பொதிந்து தரும் பைகளாக கேரி பைகள் திகழ்ந்து வந்ததுதற்போது பழைய முறை போல காகிதபைகள் மீண்டும் வந்துள்ளது.

பிளாஸ்டிக்கை ஒழிப்பது என்பது வரவேற்கதக்கதுதான் ஆனால் மாற்று ஏற்பாடு என்பது இதுவரையில் இல்லை. உபயோகப்படுத்த பட்ட கேரி பைகள்,கப்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளாட்சிகளின் கடமையாகும்.

கழிவு கேரிபைகள், பிளாஸ்டிக்குகளை மறு சுழற்சியில் பயன்படுத்தினால் பிளாஸ்டிக்கும் ஒழியும் சிறு, குறு தொழிலாளர்களையும் அது பாதிக்காது.ஏற்கனவே ஷாம்பு, பன்னாட்டு உணவு பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பற்பசைகள்,தண்ணீர் பாட்டில்கள்,உணவு பொருட்கள்,பிஸ்கட்கள் போன்றவைகள் எல்லாம் பிளாஸ்டிக் கவர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்களில் தான் வருகிறது.

அதையெல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கும் மத்திய அரசு சிறு, குறு தொழில்களை மட்டும் நசுக்கும் நோக்கில் இந்த பிளாஸ்டிக் தடையை கொண்டு வந்துள்ளதாக சிறு குறு தொழிலாளர்கள் தங்களது விரக்தியை தெரிவித்து வருகின்றனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி,ஊராட்சி நிர்வாகங்கள் தங்களது வரையறைக்குட்பட்ட பகுதிகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை சரியாக சேகரித்து மறு சுழற்சிக்கு அனுப்பி வைத்தாலே விழிப்புணர்வு மக்களிடத்தில் தோன்றும் என்ற குரல் தற்பொழுது எதிரொலிக்கிறது.

ஏற்கனவே ஜி.எஸ்.டி. பிரச்சனையால் நாட்டில் தொழில்கள் நசிந்து உள்ளது தற்போது பிளாஸ்டிக் ஒழிப்பினால் சிறு,குறு தொழில்களும் அழிந்து விடும் அபாயத்தில் உள்ளது மேலும் இது பன்னாட்டு கம்பெனிகளுக்கு சாதகமாகவும் அமையும் என்று தெரிகிறது.

பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை காரணமாக நெல்லைமாவட்டத்தில் லட்சக்கணக்கான பெட்டிக்கடைகள் மற்றும் சிறு பலசரக்கு கடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

plastic ban tamilnadu failure


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->