வீர மரணம் அடைந்த வீரர்களுக்காக தமிழகம், புதுச்சேரியில் பெட்ரோல் பங்க் மூடல்.!! அதிகாரபூர்வ நேரம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கிச் தேசிய நெடுஞசாலையில் சென்று கொண்டிருந்த போது புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் 2 பேருந்துகளின் மீது குறிவைத்து, வெடிகுண்டு நிரப்பிய பயங்கரவாதிகளின் வாகனம் தாக்குதல் நடத்தியது.

பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களும் வீர மரணம் அடைந்துள்ளனர். இன்று அவர்களின் உடல் விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களுக்கு பொதுமக்கள் உள்ளிட்ட பலருமஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் நாடு முழுவதும் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இரவு 8 மணி முதல் 8.15 வரை பெட்ரோல் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol bunk shout down in 15 minutes for pulwana attack


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->