ஒரு நாள் இரவை கழிக்கவே செத்து பிழைக்கிறோம். சென்னை மழை வெள்ளத்துக்கு பிறகு என்ன நடந்தது..? உயிர் பயபீதியில் மக்கள்..! - Seithipunal
Seithipunal


மயிலாப்பூர் வள்ளீஸ்வரன் தோட்டத்தில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் மேற் கூரை இடிந்து விழுந்து வாலிபர் ருபேசுக்கு மண்டை உடைந்தது.

மயிலாப்பூர் பகுதி, ராஜா அண்ணாமலைபுரம் அருகே வள்ளீஸ்வரன் தோட்டம் உள்ளது. இங்குள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு 1983ல் கட்டப்பட்டது.

இந்த குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து மக்களின் உயிருக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது.

இந்தக்குடியிருப்பில் அவ்வப்போது சில வீடுகளின் மேற்கூரை இடிந்து கீழ் தளத்தில் உள்ளவர்கள் மீது விழுந்தது விபத்து ஏற்படுவதுண்டு.

பால்கனி மற்றும் படிக்கட்டுகள் உடைந்து பலரின் கை, கால்கள் முறிந்துள்ளன. சாக்கடை நீர் கீழ்த்தளத் திலேயே தேங்கி நிற்கிறது. 2015 டிசம்பர் பெருமழையால் இந்தக் குடியிருப்புகள் மேலும் பாதிப்புக்குள்ளாகின.

இந்நிலையில் 2018 ஜனவரி 11 அன்று சட்டமன்றத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “வள்ளீஸ்வரன் தோட்டத்தில் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிதாக 488 வீடுகள் கட்டித்தரப்படும்” என்றார்.

இதற்கான பணிகள் தற்போது நடந்து வருவதாக தெரிகிறது.இந்நிலையில் வள்ளீஸ்வரன் தோட்டம் ஏ பிளாக், எண்.12 என்ற இலக்கத்தில் வசித்து வரும் பூபதி என்பவரது வீட்டின் மேற்கூரை  அதிகாலை 2 மணி அளவில் பெயர்ந்து விழுந்தது. இதில் அவரது மகன் ருபேஷ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட ருபேசுக்கு தையல் போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையறிந்து ஆய்வு செய்ய வந்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம்,ருபேசின் பெற்றோர் நிவாரணம் கோரி மனு அளித்தனர்.

விரைவாக பழைய குடியிருப்பை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும். அதற்குமுன்பாக சிறுசிறு பழுதுகளை நீக்கி மக்களுக்கு அச்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PEOPLES SUFFERED AFTER FLOOD


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->