பழனி மக்களை இனி அந்த முருகன் தான் காப்பாத்த முடியும்..!! - Seithipunal
Seithipunal


கோயில் நகரம் மற்றும், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடான, பழனியில், இது கோயில் நகரம் என்ற போர்வையில் கணக்கில் அடங்காத சட்ட விரோத நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அடைக்கப்படும், என்று அரசு உத்தரவிட்டது. 

அதற்கு மாற்றாக, நெடுஞ்சாலைகள் எல்லாம் மாவட்ட சாலைகளாக பெயர் மாற்றம்  செய்யப் பட்டன. தற்போது, அந்த இடங்களில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப் பட்டுள்ளன.

திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், நுகர் பொருள் வாணிபக் கிடங்கு எதிரிலும், பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வையாபுரிக் குளத்திற்கு அண்மையிலும், ரயில்வே பீடர் ரோட்டிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப் பட்டுள்ளன.

மேலும், இங்குள்ள கடைகள் எல்லாம், அரசாங்க விதிகளை மீறி, 24 மணி நேரமும் செயல்படுகிறது. அரசாங்க ஆணையின் படி, மதியம் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தான் டாஸ்மாக் கடைகள் செயல்பட வேண்டும்.

ஆனால், பழனியில், இந்த விதிகள் எல்லாம் கடைப் பிடிக்கப் படுவதில்லை. டாஸ்மாக் கடைகளிலேயே, எல்லா சரக்கிற்கும் மேலே 20 ருபாய் அதிக வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

யாராவது, டாஸ்மாக் கடைகள், 24 மணி நேரமும் திறந்திருக்கிறது, என்று புகார் சொன்னால், அருகில் உள்ள பெட்டிக் கடைகளில், பாட்டிலுக்கு 50 ரூபாய் வீதம் அதிகம் வைத்து விற்பனை செய்யப் படுகிறது.

மேலும், இது பற்றி புகார் கூறுபவர்களின் செல்போன் நம்பர் உள்ளிட்ட விபரங்களை, சம்பந்தப் பட்டவர்களிடமே கொடுத்து விடுகிறார்கள். இதனால், சினிமாவை மிஞ்சும், அடிதடி, வெட்டுக் குத்து எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PEOPLE STRUGGLE IN PALANI CITY


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->