பிரதான சென்னை போக்குவரத்து சாலையில் பெண்கள் போராட்டம்!! ஆத்தூர் அருகே பரபரப்பு!!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் நகராட்சியில் 19-வது வார்டில் சுமார் 15 நாட்களுக்கு மேலாகியும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்காததை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும், சாக்கடை சரியாக கவனிக்கப்படாததையும் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆத்தூர்-சென்னை பிரதான சாலையில்  காலி குடங்களுடன் அமர்ந்து கண்டிக்கும் விதத்தில் கோ‌ஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சாலைமறியல் போராட்டம், அங்கு சுமார் ஒரு மணி நேரம் கிட்டதட்ட நடைபெற்றுள்ளது. எனவே, சேலம்-சென்னை செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், அந்த சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. 

இதுபற்றி பொதுமக்கள், "நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் பலமுறை தொடர்பு கொண்டு புகார் கூறியும் பயனில்லை. குப்பைகளை சுத்தம் செய்வதில்லை. குடிநீர் வழங்கியும் 15 நாட்களுக்கு மேலாகியுள்ளது.

குழந்தைகளுக்கு சாக்கடை சுத்தம் செய்யாததால் காய்ச்சல் மற்றும் வாந்தி, பேதி போன்றவை ஏற்படுகிறது. எனவே தான் பொறுக்கமுடியாமல் நாங்கள் சாலை மறியல் செய்ய வந்தோம். 

பின்னர் தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அங்கு உடனடியாக போலீசார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேரில் வந்து மக்களை சந்தித்து பேச்சுவார்த்தியில் ஈடுப்பட்டனர். இதனால், சமரசம் பேசி பெண்கள் கலைந்து சேன்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

people protest in salem attur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->