மக்கள் ஏற்பாடு செய்த விநோத திருமணம்! மணமக்கள் மறித்து போன சோகம்! சோகத்தில் மூழ்கிய கிராமம்! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த தெற்கு வள்ளிக்குளக்கரை  என்ற கிராமத்தில் விநாயகர் கோவில் ஒன்று  உள்ளது. இக்கோயிலின் அருகே வேம்பு மற்றும் அரச மரங்கள் நடப்பட்டு வளர்த்து வந்தனர். அந்த ஊரில் மழை இல்லாத காரணத்தால் இந்த வேம்பு-அரச மரத்துக்கு “திருக்கல்யாணம்” நடத்தினால் மழைபெய்யும் என்று அந்த கிராம மக்கள் நம்பியுள்ளனர். 

இதனையடுத்து மரங்களின் திருமண விழாவிற்கு தயாரான கிராம மக்கள் மனிதர்களுக்கு போல ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்பிதழ் அச்சிட்டப்பட்டு வீடுவீடாக கொடுத்துள்ளனர். வரும் 11-ம்தேதி காலை 9மணியிலிருந்து 10.30-க்குள் திருமணம் நடக்க இருந்த நிலையில் அந்த மரத்திலிருந்து சில நாட்களாக அதனுடைய இலைகள் உதிர ஆரம்பித்தன.

ஆரம்பத்தில் வெயில் தாக்கத்தால் இலைகள் உதிர்கின்றன. விரைவில் மரம் துளிர் விடுமென அப்பகுதியினர் எதிர்பார்த்தனர். ஆனால் ஒட்டுமொத்த இலைகளும் உதிர்ந்த பிறகும் மரத்தில் துளிர் விடும் எந்தவித மாற்றமும் இல்லை. இதனால் அந்த ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து பட்டுப்போன வேம்பு-அரச மரங்களின் அடியில் ஆலோசனை கூட்டம் நடத்திய பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி பட்டுப்போன மரத்திற்கு திருக்கல்யாணம் நடத்த முடியாது. அதனால் திருமணத்தை நிறுத்தி விட தீர்மானித்தனர். 

இதுகுறித்து திருமண ஏற்பாட்டாளர்கள் கூறுகையில் இந்த மரங்கள் சுமார் 58 ஆண்டுகள் பழமையானது. இந்த வேம்பு-அரச மரங்களுக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என இதனை செய்ய நினைத்தோம் ஆனால் ஒருசேர 2 மரமும் பட்டுப்போய் விட்டன. இது எதனால் நடந்தது என்று புரியவில்லை. அதனால் திருமணத்தை நிறுத்தி விட்டோம் என்று சோகத்துடன்  தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

people plan to marry between trees but trees died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->