கிளப்னு பேரு வச்சுக்கிட்டு உள்ள இதெல்லாம் நடக்குதா..? உண்மைகளை உடைத்தெறியும் ஊத்துக்குளி மக்கள்.! - Seithipunal
Seithipunal


ஊத்துக்குளி வெள்ளைக்கவுண்டன் புதூர் பிரிவு சாலையில் மது அருந்தும் கூடத்துடன் தனியார் சூதாட்ட கேளிக்கை விடுதி அமைப்பதற்கு அனுமதி அளிக்க கூடாது. அந்த கேளிக்கை விடுதி தொடங்குவதற்காக நடத்தப்படும் பணிகளையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இக்கூட்டத்தில் கேளிக்கை விடுதி அமைவதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அதில், ஊத்துக்குளி இரயிலடி, குன்னத்தூர் சாலை, வெள்ளைக்கவுண்டன்புதூர் பிரிவு சாலையில் உள்ள கட்டிடத்தில் தனியார் சூதாட்ட கேளிக்கை விடுதி, மது அருந்தும் கூடத்துடன் அமைக்கும் வேலைகள் நடந்து வருகிறது.

இதை அறிந்த ஊர் மக்கள் ஊத்துக்குளி வட்டாட்சியர், ஊத்துக்குளி காவல்துறையினர் ஆகியோரிடம் ஆட்சேபணை தெரிவித்து மனு அளித்தனர். ஆனாலும் தொடர்ந்து பணிகள் நடைபெறுவதாகவும், திறப்புவிழாவுக்கு ஆயத்த ஏற்பாடுகள் நடப்பதாக மக்கள் தெரிவித்தனர்.

மேலும் தனியார் சூதாட்ட விடுதி-மது அருந்தும் கூடம் அமையும் இடம் 200-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் அமைதியாக வாழ்ந்து வரும் பகுதியாகும்.

பத்துக்கும் மேற்பட்ட சிறு பனியன் உற்பத்திக்கூடங்கள், 200-க்கு மேற்பட்ட பெண்கள் வேலை செய்யும் பகுதி, வெள்ளைக்கவுண்டன்புதூர் ஊருக்கு செல்லும் பிரதான சாலை என இருக்கும் நிலையில், தனியார் ஒருவரின் சுய லாபத்திற்காக இந்த சூதாட்ட விடுதி - மதுக்கூடம் உருவாகுமானால், இப்பகுதி மக்கள் சொல்லவொண்ணா துயரத்திற்கு ஆளாவார்கள்.

சூதாட்ட, குடிகார நபர்களின் செயல்களாலும், அன்னிய நபர்களின் நடமாட்டத்தாலும் இப்பகுதியில் அமைதி சீர்குலைந்து, தேவையற்ற சச்சரவுகள், போக்குவரத்துக்கு இடையூறுகள் என சட்ட-ஒழுங்கு சீர்கேடு ஏற்பட வழி ஏற்படும்.

பார் நடத்துபவர்களின் லாப வெறிக்காக இப்பகுதி மக்களின் உயிர் உடமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளததால் தனியார் சூதாட்ட விடுதி-மது அருந்தும் கூடத்திற்கு அரசு அனுமதியளிக்கக் கூடாது.

அதற்காக நடைபெற்று வரும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். மனமகிழ் மன்ற உள்ளிட்ட பெயர்களில் சட்டவிரோத தொழில் செய்யும் முயற்சியையும் தடை செய்ய வேண்டும்.

ஊத்துக்குளி ஆர்.எஸ்.-ஊத்துக்குளி டவுன் பிரதான சாலையில் உள்ள அரசு மதுபான கடையில் விற்பனை நேரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகளுக்கும், பொது மக்களுக்கும் மிகப்பெரிய இடையூறு ஏற்படுகிறது.

ஈரோடு-திருப்பூர் பேருந்து போக்குவரத்து பிரதான சாலையாக உள்ளதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. ஆகவே, இக்கடையை உடனடியாக இட மாறுதல் செய்ய வேண்டும்.

அதுவரை காவல்துறை மூலமாக வாகனப் போக்குவரத்துக்கும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், சாலையை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

people oppose elite bar uththukuli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->